போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஹிந்தியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'குயின்' படத்தை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்து எடுத்து முடித்துள்ளனர். அப்படங்களின் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டன.
தமிழில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் 'தட் இஸ் மகாலட்சுமி', கன்னடத்தில் 'பட்டர்பிளை', மலையாளத்தில் 'ஜம் ஜம்' என ரீமேக் செய்துள்ளார்கள். இப்படத்தை தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்க, தெலுங்கு, மலையாளத்தில் நீலகண்டா இயக்கினார். ஆனால், பாதிப்படம் முடிந்த நிலையில் தெலுங்குப் பட நாயகி தமன்னா, அதன் இயக்குனர் நீலகண்டா ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால், அந்தப் படத்தை இயக்குவதிலிருந்து நீலகண்டா விலகினார். பின்னர் பிரசாந்த் வர்மா அந்தப் படத்தை இயக்கி முடித்தார்.
இதனிடையே, இன்று வெளியான போஸ்டர்களில் தெலுங்குப் பட போஸ்டரான 'தட் இஸ் மகாலட்சுமி' போஸ்டரில் இயக்குனர் என யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு இயக்குனரின் பெயர் இல்லாமல் போஸ்டர் வெளியாகியுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.